பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மகரம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மகரம்

புத்துணர்வுடன் செயல்களை செய்யும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்வதும், முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்வதும்.. எடுக்கும். காரியங்கள் திறம்பட செய்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் சிறப்பான முன்னேற்றம் பெறுவீர்கள் .எதையும் காரியவாதியை போல் செயல்பட்டு உங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். சுமையாக இருந்த வந்த காரியங்களில் சீர் செய்து வளம் பெறச் செய்வீர்கள். எதிலும் பாதிப்பை எதிர்கொண்டு செயல்பட்டு வெல்வீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீர்வு தரும். முன் யோசனை மூலம் நல்ல தீர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அமைதியாக செயல்பட்டு உங்களுக்கு தேவையான விடயங்களில் முழு கவனம் செலுத்தி பயன் பெறுவீர்கள். தொழிலில் படிப்படியாக முன்னேறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
23-02-2024 வெள்ளி இரவு 08.42 முதல் 26-02-2024 திங்கள் காலை 08.19 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசாங்க பணிகளில் சிறந்து விளங்குவீர்கள். சிலருக்கு புதிய பதவி கிட்டும். பொறுப்புகள் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.
 
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வசதி வாய்பபுகளை கூட்டிக் கொள்வீர்கள். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். நினைத்ததை விட உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மேன்மை அடையும்.
 
அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
விளையாட்டு துறை, ராணுவம், பாதுகாப்பு சார்ந்த பணிகளில் பாராட்டு பெறுவீர்கள். நல்மதிப்பும் உயர்வும் கிட்டும். பொருளாதார நிலை உயரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், சிவப்பு, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
சனி, ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் ஆலயம் சென்று வெற்றிலை மாலை போட்டு நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும்.